டென்னிஸ் இறுதிச்சுற்று- ரபேல் நடாலை விழ்த்திய மெத்வதேவ்

ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. டாப்-8 வீரர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு அரைஇறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), 4-ம் நிலை வீரர் டேனில் மெட்விடேவை (ரஷியா) சந்தித்தார். இதில் முதல் செட்டை பறிகொடுத்த மெட்விடேவ் 2-வது செட்டிலும் 4-5 என்று பின்தங்கி தோல்வியின் விளிம்புக்கு சென்றார்.
அதன் பிறகு சரிவில் இருந்து எழுச்சி பெற்று டைபிரேக்கர் வரை போராடி செட்டை வசப்படுத்திய மெட்விடேவ் இறுதியில் நடாலுக்கு அதிர்ச்சி அளித்தார். 2 மணி 35 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் மெட்விடேவ் 3-6, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் நடாலை வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். 24 வயதான மெட்விடேவ் இறுதிப்போட்டியில் டொமினிக் திம்முடன் (ஆஸ்திரியா) மோதுகிறார். இவர்கள் இருவரும் இந்த தொடரில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஜோகோவிச், 2-ம் நிலை வீரர் நடால் இருவரையும் சாய்த்து இருப்பது கவனிக்கத்தக்கது.
Translate »
error: Content is protected !!