டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: வெண்கலம் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு முதல்வர் வாழ்த்து

டோக்கியோவில் நடைபெறும் 32 வது ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். வெண்கலப் பதக்கத்துக்கான ஆண்கள் ஹாக்கி போட்டியில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஜெர்மனியை 5-4 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா பதக்கம் வென்றது. 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ளது.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்ற அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலவர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

41 வருட காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. ஆண்கள் ஹாக்கியில் 12 வது ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியா அணி வீரர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நான் உறுதியாக நம்புகிறேன், டோக்கியோ 2020 இல் இந்த வெற்றியுடன், இந்திய ஹாக்கி அணி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. என்று முதல் பதிவிட்டுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!