தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

சென்னை,

அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஓட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழையும், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும்‌,

கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யகூடும் .

13 ந்தேதி தென் தமிழகத்தில் ஒரு இல இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும்,. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிவயையும் நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி அதிகபட்சமாக பெய்த மழை அளவு விவரம் வருமாறு: புவனகிரி 11 செ.மீ, பரங்கிப்பேட்டை 9 செ.மீ., ராமநாதபுரம், குடவாசல் தலா 6 செ.மீ., ராமேஸ்வரம், காட்டுமன்னார் கோவில், கொள்ளிடம் தலா 5 செ.மீ., மனமேல்குடி, மயிலாடுதுறை, சீர்காழி, மண்டபம், அறந்தாங்கி, தூத்துக்குடி 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Translate »
error: Content is protected !!