தமிழகத்தில் ஜூன் 21 வரை ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை

தமிழகத்தில் கொரோனா குறைந்து வரும் நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து இன்று முதலமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனாபரவலை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற 14-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய அமலில் உள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா பரவல் குறையாமல் இருந்ததால் முழு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்னும் நான்கு நாட்களில் முடிவையும் ஊரடங்கை நீடிக்கலாமா என்பது குறித்து இன்று முதல்வர் மு..ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன்  ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஜூன் 21 வரை ஆலோசனையில் , தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளதுமேலும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்த ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!