தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் மாஸ்க் அணியாத நபர்கள் மீது 10.34 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் முகத்தில் மாஸ்க் அணியாத நபர்கள் மீது கடந்த மார்ச் மாதம் முதல் நேற்று 19.5.2021 வரை மொத்தம் 10 லட்சத்து 34 ஆயிரத்து 725 வழக்குகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வடக்கு மண்டலமான காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 521 வழக்குகளும், மத்திய மண்டலமான திருச்சி, கரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 349 வழக்குகளும், மேற்கு மண்டலத்தில் கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 478 வழக்குகளும்,
தென்மண்டலமான மதுரை, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 3 லட்சத்து 42 ஆயிரத்து 914 வழக்குகளும் மற்றும் மதுரை, நெல்லை, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட நகரங்களில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 463 வழக்குகளும் என மொத்தம் 9 லட்சத்து 78 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளன.
அதே போல சமூக விலகலை கடைபிடிக்காதவர்கள் மீது மொத்தம் 40 ஆயிரத்து 192 வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தின் வடக்கு மண்டலத்தில் 10,202 வழக்குகளும், மத்திய மண்டலத்தில் 5,970 வழக்குகளும், மேற்கு மண்டலத்தில் 6,256 வழக்குகள், தென்மண்டலத்தில் 9,466 வழக்குகள் உள்பட மொத்தம் 40,022 வழக்குகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.