தமிழகத்தில் முக்கிய 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் முக்கிய 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் மு.,ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக் கொண்டதும் அரசின் செயல்பாடுகளை வேகப்படுத்த உயர் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்ட உத்தரவின்படி, கோவை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உளவுத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரையில் காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், சமீபத்தில் தேர்தல் ஆணையரின் பரிந்துரையால் கோவைக்கு மாற்றப்பட்டவர்.

சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை மாநகர காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருக்கும் ஜெயந்த் முரளிக்கு பதில் பி.தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!