தமிழகம் முழுவதும் மாஸ்க் அணியாத நபர்கள் மீது 9.4 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முகத்தில் மாஸ்க் அணியாத நபர்கள் மீது கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி முதல் வடக்கு மண்டலத்தில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 771 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதே போல மத்திய மண்டலத்தில் 1,27,599, மேற்கு மண்டலத்தில் 1,53,835, தென் மண்டலத்தில் 3,18,945 மற்றும் மதுரை, நெல்லை, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட நகரங்களில் 1,69,887 வழக்குகளும் என மொத்தம் 94,04,037 வழக்குகள் பதிவாகியுள்ளன.
அதே போல சமூக விலகலை கடைபிடிக்காத நபர்கள் மீது மொத்தம் 9 லட்சத்து 44 ஆயிரத்து 37 வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தின் வடக்கு மண்டலத்தில் 9,057 வழக்குகளும், மத்திய மண்டலத்தில் 4,991 வழக்குகளும், மேற்கு மண்டலத்தில் 4,606 வழக்குகள், தென்மண்டலத்தில் 7,529 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.