தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஊழியருக்கு 3 மாத சிறை தண்டனை? ஏன் ?

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எண்டப்புளி புதுப்பட்டி சேர்ந்தவர் பாண்டியராஜன்(52). இவர் தமிழ்நாடு மின்வாரியம் பெரியகுளத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் தமது குடும்ப செலவிற்காகவும், தனது இல்லத்தில் நடைபெற்ற காதணி விழாவிற்காகவும் கடந்த 2016&ம் ஆண்டு தேவதானப்பட்டி சேர்ந்த பிச்சைப்பாண்டி(52) என்பவரிடம் கடனாக ரு 5 லட்சம் பெற்றுள்ளார். இதற்காக கடந்த 2018&ம் ஆண்டு பெரியகுளம் வடகரை பாரத ஸ்டேட் பேங்க்கிற்கான செக் பாண்டியராஜன் வழங்கியுள்ளார். செக்கிற்கான பணம் இல்லையென்று திரும்பியதால் பெரியகுளம் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் பிச்சைப்பாண்டி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மேஜிஸ்திரேட் அருண்குமார், குற்றவாளி பாண்டியராஜனுக்கு 3 மாத சிறை தண்டனையும் 2 மாதத்தில் ரு 4 லட்சத்து 75 ஆயிரத்தை பிச்சைப்பாண்டியிடம் வழங்க வேண்டும் என்றும் தவறினால் மேலும் 1 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

Translate »
error: Content is protected !!