ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, தாலிபான் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் கணக்குகளை முடக்குவதாக பேஸ்புக் நேற்று அறிவிப்பை வெளியிட்டது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ஃபேஸ்புக் இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் தலிபான்களுடன் தொடர்புடைய வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.