தலைமைச் செயலகத்தில் கர்ப்பிணிப் பெண்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு – தலைமைச் செயலாளர் உத்தரவு

சென்னை தலைமைச் செயலகத்தில் கர்ப்பிணிப் பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்புப்பணியாக தளர்வில்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமைச்செயலாளர் இறையன்பு இன்று உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘‘தலைமைச் செயலகத்தில் இணைநோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் அவசியமாக தேவைப்படும் பணியாளர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதிக்க வேண்டும்’’ என அவரது உத்தரவில் கூறியுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவித்தன.

Translate »
error: Content is protected !!