திருவள்ளூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தொடர்பாக, வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் பொன்னையா பல்வேறு இடங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: திருநின்றவூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பெரிய ஏரியின் கரையை ஒட்டி பேரூராட்சி துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் 2019 -2020 ஆண்டு இயக்ககம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதி திட்டத்தின் கீழ் ரூ.175 லட்சம் மதிப்பீட்டில் வார்டு எண். 10 முதல் வார்டு எண். 13 வரை (வார்டு எண். 11 மற்றும் வார்டு எண்.12 வழியாக) பொதுப்பணித்துறையின் ஏரிக்கரை ஓரம் மழைநீர் வடிகால்வாய் கட்டுதல் பணியினை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மழைநீர் வெளடியேறும் பகுதிகளான கன்னிகாபுரம், இராமதாசபுரம் மற்றும் நடுகுத்தகை ஆகிய பகுதிகளை பார்வையிட்டு, மழைநீர் தேங்காதவாறு மழைநீர் எளிதில் வேளியேற ஏதுவாக அனைத்து பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆவடி பருத்திப்பட்டில், வசந்தம் நகர் குடியிருப்பு பகுதி, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் அதிகம் மழைநீர் தேங்கும் இடங்கள் ஆகும். இப்பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் தங்கு தடையின்றி மழைநீர் எளிதில் வெளியேற குப்பைகளை அகற்றி, தூர்வாரி, ஆழப்படுத்தி, அகலப்படுத்தி பணிகளை துரிதப்படுத்தி அனைத்து நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னர், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் வட்டாரம், அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் காலிமனைகளில் மற்றும் வௌிப்பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுப்பு நடவடிக்கையாக வடிகால்வாய் வழியாக தண்ணீர் வௌியேறவும், இனிவருங்காலங்களில் வீடுகளில் வௌ்ளம் உட்புகாதவாறு தடுப்பு அமைத்தும், மழைநீர் தேங்காதவாறும், உரிய நடவடிக்கை மேற்கொண்டு வடிகால்வாய் அமைத்தும், அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதை தடுப்பு அமைத்து, உடனடியாக அதற்குண்டான ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.