இஸ்தான்புல்,
துருக்கியின் கருங்கடல் மாகாணமான பார்ட்டின் கடற்கரையில் சரக்கு கப்பல் கவிழ்ந்ததது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
ரஷிய நாட்டுக் கொடியுடன் கப்பலில் 13 பேர் குழுவினருடன் சரக்குக் கப்பல் ஞாயிறு அன்று வந்துகொண்டிருந்தது. அப்போது இந்த விபத்து நிகழ்ந்தது. துருக்கிய கடலோர காவல்படை தனது இணையதளத்தில் அந்தக் கப்பலில் 12 ஊழியர்கள் இருப்பதாகவும், கப்பல் பலாவ் கொடியுடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹூரியட் தினசரி அந்தக் குழுவில் இரண்டு ரஷியர்களும் 10 உக்ரேனியர்களும் இருந்ததாக அறிவித்தனர். துருக்கிய போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகம் ஒரு டிவிட்டரில், அர்வின் என்ற கப்பல் மோசமான வானிலை காரணமாக இரண்டாக உடைந்து மிதந்ததாகக் கூறினார்.
இந்தக் கப்பல் ஜார்ஜியாவிலிருந்து பல்கேரியா செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காணாணமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக, மீட்பு முயற்சி களுக்கு ஆதரவாக துருக்கிய கடற்படை போர்க் கப்பல் ஒன்றை நிறுத்தியுள்ளது.