தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 359 மனுக்களுக்கு தீர்வு: எஸ்பி ஜெயக்குமார் தகவல்

தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக ஜெயக்குமார் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்களை அதிரடியாக நிறைவேற்றி வருகிறார். பொதுமக்களின் நலனில் அதிக அக்கறை செலுத்தும் ஜெயக்குமார் பொதுமக்களிடம் தினந்தோறும் மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

 

அதன்படி மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் குறை தீர்ப்பு முகாம் நடத்தும்படி எஸ்பி ஜெயக்குமார் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அந்தந்த காவல் நிலையங்களில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. அந்த வகையில் இன்று நடந்த முகாமில் பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன. பொதுமக்கள் அளித்த மொத்தம் 394 மனுக்களுக்கு மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் வரவழைக்கப்பட்டனர். அதில் 359 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சப் டிவிஷனில் மட்டும் இன்று 85 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. அதில் 74 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதே போன்று தூத்துக்குடி ஊரகத்தில் 47 புகார்களுக்கும், திருச்செந்தூரில் 73 புகார்களுக்கும், மணியாச்சியில் 40 புகார்களில் 29க்கும், கோவில்பட்டியில் 61க்கு 61ம், விளாத்திக்குளத்தில் 38க்கு 35ம், சாத்தான்குளத்தில் 50க்கு 45 புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டன. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 394 மனுக்கள் மீதான விசாரணை மேற்கொள்ளப்பட்டு 359 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!