தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜி ஆனந்த்தின் புகைப்படத்தை வைத்து சமூக வலைதளமான முகநூலில் போலி கணக்கு உருவாக்கப்பட்டு அதன்மூலம் உறுப்பினரின் உண்மையான முகநூல் கணக்கில் உள்ளவர்களின் முகவரியை கொண்டு தனியே முகநூல் சாட்டிங் மூலம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதுடன், மிரட்டல் விடுப்பதாகவும் தெரியவந்தது.
பண உதவி கேட்டு எந்த தகவலையும் பதிவிடவில்லை என தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து இப்படி பொய்யான தகவல்களை பரப்பும் மர்ம நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், போலி முகநூல் கணக்கையும், புதிய வங்கி கணக்கையும் பயன்படுத்தி எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளனர் என்பது தெரியாத நிலையில் மோசடி வங்கி கணக்கை முடக்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் சார்பில் சகோதரர் ஹரிஷ் பிரபு காவல்துறை ஆணையரிடம் புகார்மனு அளித்தார். இந்த புகாரில் தவறான செய்திகளை பரப்பும் நபரை உடனடியாக கைது செய்வதோடு அந்த சமூக வலைத்தள கணக்கை முடக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.