நாடாளுமன்றத்தில் ஜோ பைடன் உரை..?

அமெரிக்க அதிபராக 100 நாட்களை நிறைவு செய்வதையொட்டி ஜோ பைடன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்

அமெரிக்கா எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி, அமெரிக்காவுக்கான வாய்ப்புக்கள், தேசத்தை வலுப்படுத்துவது மற்றும் ஜனநாயகத்திற்கு புத்துயிர் கொடுப்பது குறித்து பேச வந்திருப்பதாக தனது உரையை தொடங்கினார்.

அப்போது முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக சீனா விவகாரம் குறித்து பேசினார்.

சீன அதிபர் ஜின்பிங்குடன் பேச நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதாக கூறிய ஜோ பைடன், அவரிடம் அமெரிக்கா போட்டியை வரவேற்கிறது; மோதலை தேடவில்லை என்று கூறினேன் என்றார். மேலும் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவத்தின் இருப்பு பலப்படுத்தப்படும் என்றும் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் மேம்படுத்தப்படும் என்றும் கூறினார்.

Translate »
error: Content is protected !!