நோய்தொற்று தடுப்பு மருந்துகளை போட்டுக் கொள்ள காலை முதல் ஆர்வமுடன் காத்திருந்த பொதுமக்கள்

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை நகர் மற்றும் கிராமப்புறங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தி உள்ளது.

மேலும் நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி மருந்துகளை நாள்தோறும் மக்களுக்கு செலுத்தி வரும் நிலையில் இன்று பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட தென்கரை பகுதி மற்றும் ஜெயமங்களம் ஊராட்சியில் தடுப்பு மருந்து செலுத்தும் முகாம் அமைக்கப்பட்டது

நோய்தொற்று தடுப்பு மருந்துகளை  செலுத்தி கொள்வதற்காக பொதுமக்கள் காலை 8 மணி முதலே அதற்காக ஒதுக்கப்பட்ட தனியார் திருமண மண்டபங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடித்து அமர வைக்கப்பட்டு ஆர்வமுடன் காத்திருந்தனர். முன்னதாக தடுப்பு மருந்துகளை போட்டுக் கொள்ள வந்த பொதுமக்களுக்கு உடல் வெப்ப  பரிசோதனை செய்யப்பட்டு கிருமி நாசினிகளை கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்பு தடுப்பு மருந்துகளை போட்டுக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்

இன்று மட்டும் பெரியகுளம் நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் 1000 நபரக்ளுக்கு தடுப்பூசி போட மருந்து ஒதுக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டு  தொடர்ந்து நோய்க்கு தடுப்பு மருந்தினை வருகின்றனர். பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசியை போட்டு செல்கின்றனர்.

Translate »
error: Content is protected !!