பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை உடனடியாக திரும்பபெற வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தல்..
அரசின் வருவாயை பெருக்கும் நோக்கில் சித்திரை முதல் தேதி, ஆடிப்பெருக்கு மற்றும் தைப்பூசம் ஆகிய மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு செய்வதற்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்க தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.
இந்த இக்கட்டான கொரோனா காலகட்டத்தில் மக்கள் வேலை வாய்ப்பின்றி, வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் இழந்து தவிக்கும் நிலையில், பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.
எனவே மங்களகரமான நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக திரும்பபெற வேண்டும். இல்லையென்றால் அரசின் உத்தரவை எதிர்த்து தேமுதிக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என விஜயகாந்த் வலியுறுத்தல்..