காவிரி ஆற்றில் மூழ்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர்: 3 பேரின் உடல்கள் மீட்பு

UPDATED: RAJA MUHAMMED: 18.11.2020, WEDNESDAY, 11.59 PM

முசிறி ஆற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் நீரில் மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 3 பேரின் உடல்களை தீயணைப்பு படையினரும், காவல்துறையினரும் மீட்டுள்ளனர்.

முசிறி பரிசல் துறை, அழகுநாச்சி அம்மன் கோவில் பின்புறம் நடுக்காவேரி ஆற்றில் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்களுடன் குளித்தனர். அப்போது திடீரென 9 பேரும் ஆற்று நீரில் மூழ்கினார்கள். அது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கும், முசிறி காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து ஆற்றில் ரப்பர் படகுகள் மற்றும் டியூப்கள் உதவியுடன் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அதனையடுத்து கோவை, நவக்கரையைச் சேர்ந்த சரவணகுமார் (31) என்பவது உடல் மீட்கப்பட்டது. சரவணகுமார், கோயம்புத்தூர், கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  பேராசிரியராக பணிபுரிகிறார். மேலும் கரூரைச் சேர்ந்த ரகுராமன் என்பவரது மகன்கள் ரத்தீஸ் (வயது 12), மிதுன் (வயது 8) ஆகி இருவரும் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். ஆனால் அவர்கள் உடல் கிடைக்க வில்லை. இருவரும் கரூரில் உள்ள பள்ளியில் 7ம் வகும்பும், 3ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

தீயணைப்பு படையினர் மற்றும் காவலர்கள், இரண்டு சிறுவர்களையும் காவிரி ஆற்றில் தேடிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தீயணைப்புப் படையினர் தேடும் போது அடையாளம் தெரியாத சுமார் 13 முதல் 15 வயது மதிக்கதக்க சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. அது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் பார்த்திபன் (வயது 12), முசிறி, அசோக்குமார்  கங்கா மளிகை அருகில் தா.பேட்டை ரோட்டைச்சேர்ந்த சிறுவன் என தெரியவந்தது. ரேசன் கடைக்கு சென்று வருவதாக கூறி விட்டு காவிரி ஆற்றில் குளிக்க சென்றவர் ஆற்றில் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்தது. இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிகிறது.

மீட்கப்பட்ட சரவணகுமார் மற்றும் பார்த்திபனின் பிரேதங்கள் முசிறி அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பரிசல் விபத்து நடந்தது தெரியவந்ததும் முசிறி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆற்றில் குதித்து மிதவைகளின் உதவியுடன் உடல்களை தேடி மீட்டுக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஆற்றில் மூழ்கிய 9 பேரில் மீதம் 6 பேரின் உடல் கிடைக்காததால் அவர்கள் கதி என்ன ஆனது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த சம்பவம் நேற்று முசிறி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆற்றில் மூழ்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்

Translate »
error: Content is protected !!