பழனி எம்எல்ஏ முயற்சியால் கொடைக்கானலில் புதிய கொரோனா சிகிச்சை மையம் திறப்பு

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நோய்த்தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு சுமார் 50 படுக்கைகள் தான் உள்ளன. தற்போது நோய் தொற்று அதிகமாக உள்ள காரணத்தினால் கூடுதல் படுக்கை வசதியுடன் கூடிய மையம் தேவைப்பட்டது.

இதுபற்றி பழனி எம்எல்ஏ பி செந்தில்குமார் இடம் கொடைக்கானல் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் பொன்ரதி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனடிப்படையில் பழனி எம்எல்ஏ . பி செந்தில்குமார் கொடைக்கானல் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி தங்கும் விடுதியை மையமாக மாற்ற நடவடிக்கை எடுத்தார்.

இதையடுத்து 16 படுக்கைகள் கொண்ட இந்த தங்கும் விடுதி கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கோரானா சிகிச்சை மையமாக இந்த தங்கும் விடுதி மாற்றப்பட்டது. இந்த சிகிச்சை மையத்தை நேற்று கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் நாராயணன், கொடைக்கானல் போலீஸ் டிஎஸ்பி ஆத்மநாதன், ஆகியோர் திறந்து வைத்து இந்த மையத்திற்கான சாவியை கொடைக்கானல் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் பொன் ரதியிடம் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கொடைக்கானல் அரசு தலைமை மருத்துவர் டாக்டர் பொன் ரதி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அரவிந்த், கொடைக்கானல் முன்னாள் நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹிம், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் செல்லத்துரை, திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயக்கண்ணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Translate »
error: Content is protected !!