மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு மதுரையில் நேற்று முதல்வர் அவர்களால் கோவில் திறக்கப்பட்டது. அந்த விழாவில் கலந்துகொள்ள பரமக்குடியில் இருந்து மதுரைக்கு பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் பாதயாத்திரை நடந்து சென்றார்.
இதனால் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. மதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட T.குன்னத்தூர் பகுதியில் அமைந்துள்ள அந்த கோவிலுக்கு பரமக்குடியில் இருந்து எம்எல்ஏ சதன் பிரபாகர் நடந்து சென்றதால் அவருடைய காலின் பாதத்தில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தை குணப்படுத்துவதற்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை எடுத்துக்கொண்ட வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.