பெட்டிஷன் மேளா! திருச்சி டிஐஜி ஆனிவிஜயா அதிரடி

BY RAJA MUHAMMED, MIMISAL, UPDATED: SATURDAY, OCTOBER, 24, 2020, 11.56 PM

புதுக்கோட்டை:  திருச்சி டிஐஜி விஜயா பெட்டிஷன் மேளா என்ற புதிய திட்டத்தை துவங்கி வைத்து பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

திருச்சி சரக டிஐஜியாக ஆனிவிஜயா கடந்த ஜுன் மாதம் பொறுப்பேற்றார். அன்று முதல் திருச்சி சரக மாவட்டங்களான திருச்சி, கரூர், அரியலுார், புதுக்கோட்டை, பெரம்பலுார் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் முதல்நாளே அதிரடி பேட்டியளித்தார்.

மேலும் பொதுமக்கள் தன்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு புகார்களை அளிக்கலாம் என்ற அறிவித்த அவர் தனது செல்போன் எண்ணையும் தெரியப்படுத்தினார். அதனையடுத்து ஆனிவிஜயா திருச்சி சரகத்தில் பொதுமக்களின் குறைகளை உடனடியாக தீர்க்கும் பொருட்டு பெட்டிஷன் மேளா என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புகார்தாரருக்கு காவல்நிலையத்தில் அந்த புகாருக்கு தீர்வு அளிக்கப்படால் இருந்தால் மனு பங்கு பெற்று அந்த பகுதியை சேர்ந்த உயர் அதிகாரிகள் முன்னிலையில் தீர்வு எட்டப்படும். இந்த வகையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் டிஐஜி ஆனி விஜயா, எஸ்பி பாலாஜி சரவணன் மேற்பார்வையில் கோட்டைப்பட்டிணம் சரகத்தில் உள்ள மீமிசல் காவல் நிலையத்தில் பொதுமக்களின் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது. இன்று மட்டும் 9 புகார்கள் பெறப்பட்டு அதில் ஆறு புகார்கள் உடனடியாக தீர்வு எற்பட்டது. கோட்டைப்பட்டினம் டிஎஸ்பி சிவராமன், எஸ்ஐ துரைசிங்கம் தலைமையில் இந்த பெட்டிஷன் மேளா நிகழ்ச்சி மீமிசல் காவல் நிலையத்தில் இன்று நடந்தது. இது குறித்து அங்கு வந்த பொதுமக்கள் கூறுகையில், ‘‘டிஐஜி ஆனி விஜயா ஏற்பாடு செய்துள்ள இந்த பெட்டிஷன் மேளா நிகழ்ச்சி பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த கொரோனா காலத்தில் எங்கள் பகுதியில் அடிக்கடி ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. லாக்டவுனில் கொடுக்கப்பட்ட அனைத்து புகார்களும் நிலுவையில் கிடந்த நிலையில் இது போன்ற நிகழ்ச்சிகளால் அனைத்து உயர் அதிகாரிகளையும் ஒரே இடத்தில் சந்திக்க முடிவதால் எங்களின் பிரச்னைகள் எளிதாக தீர்வு கிடைக்கின்றது’’ என தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!