பெரியகுளத்தில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கும் பணி தீவிரம்

பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் கெரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு 10 தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவை அறிவித்த நிலையில்,

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்று வந்த காய்கறி சந்தையை பொதுமக்களின் நலன் கருதி கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தற்போது நடைபெற்று வரும் காய்கறி சந்தையை இடமாற்றம் செய்து புதிய பேருந்து நிலையத்தில் காய்கறி சந்தை நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

அதன்படி காய்கறி சந்தை புதிய பேருந்து நிலையத்தில் பந்தல் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் காய்கறி கடை உரிமையாளர்கள் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே காய்கறி கடை வைக்க அனுமதி என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இதில் பெரியகுளம் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார், ஆய்வாளர் செந்தில்குமார், நகர வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜவேல் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள் காய்கறி சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

Translate »
error: Content is protected !!