தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் குளங்கள் மற்றும் கன்மாய்களுக்கு நீர் வரத்து துவங்கி நீர் நிறைந்தது. இந்நிலையில் குளத்து நீர் மற்றும் கிணற்று நீரை பயண்படுத்தி இரண்டம் போக நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பெரியகுளம் அருகே உள்ள வடகரை பகுதியில் உள்ள 1000த்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடியை துவக்கி முதல் போக நெல் நடவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தபகுதியில் ஒரு போகம் நெல் குளத்து நீரைபயண்படுத்தியும் இரண்டாம் போகம் கினற்று நீரை பயண்படுத்தியும் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் நீரை பயண்படுத்தி என்.எல்.ஆர் என்ற ரக நெல் நடவு செய்து வருகின்றனர்.