பெரும் திறமை வாய்ந்த நடிகர் சார்லி சாப்ளின் காலமான நாளின்று

நம்மூர் வார்த்தையில் சொல்ல்வதானால் பேக்குத்தனமாய் இறுக்கமான கோட்டும், அதற்கு மாறாக தொள்ளவென்று பேண்டும், டூத் பிரஷ் மீசையும், கிழிந்த தொப்பியும், பொருத்தமில்லாத ஷுக்களும், வாத்து நடையுமாக என்று நாம் கூறும் போதே நம் கற்பனை கண்கள் முன்பாக சார்லி சாப்ளின் தோன்றிவிடுகிறார்.

இந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்த சாப்ளின் வாழ்க்கை முழுவதும் அழுகையால்தான் அவரின் அகவாழ்வு நிரம்பி இருந்தது. திரை முன் தோன்றிவிட்டால் அது எதையும் காட்டாமல் சாப்ளின் மட்டுமே தெரிவார். நான் மழையில் நனைய ஆசைப்படுகிறேன். அப்போதுதான்  நான் அழுவது உலகுக்கு அப்பொழுது தான் தெரியாதுஎன்று சொன்னார் அவர்.

தொழிலாளிகளுக்கு நேரும் அநீதிகளை படத்தில் சுட்டிக்காட்டிய அவர், முதலாளிகளை கிண்டலடித்து மாடர்ன் டைம்ஸ் என்னும் படம் எடுத்தார். அதில் எல்லாரும் பேசுவார்கள். சாப்ளின் மௌனமாகவே திரையில் தோன்றுவார். சொந்த மகனின் இறப்பின் வலியைக்கூட திரைப்படமாக எடுக்கும் வித்தை அவரிடம் இருந்தது.

அரசாங்கங்களை அவரின் படங்கள் உலுக்கி எடுத்தன. அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து இருந்தாலும் அவர் பிரிட்டன் குடிமகனாகவே இருந்தார்.நம்புங்கள் இன்றைக்கும் ஹவுஸ்புல்லாக ஓடும் அவரின் படங்கள் ஊமைப்படங்கள் அவை பேசிய கதைகள் தான் எக்கச்சக்கம. ஹிட்லரை தி கிரேட் டிக்டேடர் படத்தில் நொறுக்கி எடுத்தார்.

ஆனால் இவர் கடைசி பத்து வருடங்கள் உடல் உபாதையால் மிகவும் சிரமபட்டார் wheelchair. மூலமே இவரால் நகர முடிந்தது. 1972 ஆம் வருடம் கலையுலகம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவப்படுத்தியது. 1977இல் ஒரு கிறிஸ்துமஸ் நாளில்…. எல்லோரையும் கண்ணீர் வர சிரிக்க வைத்த அந்த மகா கலைஞனின் மரணம் முதன்முறையாக அழவைத்தது! எண்பத்தி எட்டாவது வயதில் வேவேவில்(சுவிட்சர்லாந்த்) இறந்தார்.

அவரது உடல் வாட்(Vaud) நகரில் உள்ள கார்சியர்சுர்வெவே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்யபட்ட சிலதினங்களில் உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது. சாப்ளினின் உடல் பதினோறு வாரங்களுக்குப் பின் ஜெனீவா(சுவிட்சர்லாந்தில்) ஆற்றின் அருகில் கைப்பற்றப்பட்டது. பிறகு ஆறரை அடி குழியில் மிக கடினமான சிமென்ட் கலவையால் இவர் கல்லறை அமைக்கபட்டது இவர் நினைவாக இவரது சிலை ஒன்று வெவேவில் அமைக்கப்பட்டது.🎩

Translate »
error: Content is protected !!