பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாள்….எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி அஞ்சலி

சென்னை,

பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில், அண்ணா தி.மு.. சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

அண்ணாவின் 52வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. ஆங்காங்கே அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது படத்துக்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாளான இன்று காலை 10.30 மணியளவில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில், கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான . பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் கழகச் செயலாளர்களும் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்;

கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் கலந்து கொண்டனர்.

 

Translate »
error: Content is protected !!