இராமநாதபுரத்தில் தனியார் பேருந்தில் ஆபத்தான நிலையில் பள்ளி மாணவர்கள் பயணம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுவார்களா….
நயினார்கோவில் பகுதியில் இருந்து இராமநாதபுரம் செல்லும் தனியார் பேருந்து ஒன்றில் மாணவர்கள் பாதுகாப்பின்றி பயணம் செய்வது பொதுமக்களை பதற்றமடைய செய்துள்ளது. இன்று காலையில் இராமநாதபுரம் அரண்மனை பகுதியில் மாணவர்களின் பேருந்து பயணம் அதிர்ச்சி அடையச் செய்தது.
மாணவர்கள் பின் விளைவுகளை அறியாமல் பேருந்தின் படிக்கட்டுகள் மற்றும் ஏணிப்படிகளில் டயரின் மீது ஏறி பயணிப்பதை தினமும் காண முடிகிறது என்கின்றனர் பொதுமக்கள் மேலும் இந்த அரண்மனை பகுதி கூட்ட நெரிசல் நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது இந்நிலையில் தனியார் பேருந்துகள் அதி வேகமாக தான் செல்கிறது.
இப்பகுதியில் B-2 பஜார் காவல் நிலையத்தின் காவல் உதவி மையம் உள்ளது. காவல்துறையினர் மூலம் செயல்படுத்தப்படும் கண்காணிப்பு கேமரா செயல் படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இப்பகுதியில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், போக்குவரத்து காவல்துறை, வட்டார போக்குவரத்து அலுவலர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.