மோடிக்கு யார் பெரிய அடிமை…..அதிமுக பற்றி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி விமர்சனம்

10 ஆண்டுகள் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த ஓபிஎஸ் தனது சொந்த ஊருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, ஓபிஎஸ் மற்றும் குடும்பமே சேர்ந்து வெளிநாடுகள் மற்றும் கேரளாவில் பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் வாங்கி குவிப்பு, மோடிக்கு யார் பெரிய அடிமை என்பதில் தந்தை மகனுக்கும் போட்டி என விடியலை நோக்கி பரப்புறையில் திமுக உதயநிதி விமர்சனம்.

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி  தேனி மாவட்டத்தில் நேற்று ஆண்டிபட்டியில் துவங்கி இன்று தேனி மாவட்ட எல்கையான தேவதானப்படியில் இரவு 10 மணி அளவில் நிறைவு செய்தார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுகவை வெற்றி பெறச் செய்து இந்தியாவில் 3வது மிகப்பெரிய கட்சியாக அங்கீகாரம் அளித்தீர்கள்இதனாலேயே மோடி மிகவும் கோபமாக உள்ளார்எனவே 15 கோடி ஜி.எஸ்.டி.வரி தமிழகத்திற்கு திரும்பி தர வேண்டியதை தர மறுக்கிறார்

கொரோனா காலத்தில் தனியாக செல்வதற்காக 7 ஆயிரம் கோடி மதிப்பில் இரண்டு சொகுசு விமானங்கள் வாங்கினார்அந்த விமானங்கள் வாங்கியது நமது வரிப்பணம்.கலைஞர் ஆட்சியில் மருத்துவ படிப்பிற்கு கவுன்சிலிங் தேர்வு மட்டுமே இருந்ததுதமிழகத்திற்கு நீட் தேர்வு மாணவர்களின் மருத்துவ கனவை பாதிக்கின்றது.

14 மாணவர்கள் நீட் தேர்விற்கு பயந்து தற்கொலை செய்து கொண்டனர்கடந்த ஆண்டில் மட்டும் 4 மாணவர்கள் இறந்துள்ளனர்நீட் தேர்வினை ரத்து செய்வேன்மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்வேன் என திமுக தலைவர் கூறியிருக்கிறார்.

ஒரு டீ கடை வைத்திருந்தவர் இன்று பல கம்பெனிகளை வைத்துள்ளார் எனவும் கம்பெனி பெயர்களை பட்டியலிட்டார்அன்று சசிகலாவால் பதவி உயர்வு பபற்றவர்கள் இன்று சசிகலா வருகையால் ஜெயலலிதா நினைவிடமஎம்.ஜி.ஆர் நினைவிடம் , அதிமுக கட்சி அலுவலகம் ஆகியவற்றை பூட்டி சீல் வைத்தள்ளனர்.

மேலும் நடந்த முடிந்த பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்ந்தலில் திமுக 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதே போல் வரும் சட்டமனற தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வீர்களான என கூடி இருந்த மக்களை பார்த்து கேட்டு கொண்டனர்.

மேலும் ஓபிஎஸ் துணை முதல்வரின் சொந்த ஊரான பெரியகுளத்தில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை என நிறைவேற்றப்படாத திட்டங்களை பட்டியலிட்டார்.

மேலும் ஓபிஎஸ் மற்றும் அரவது மகன் கொரோனா காலத்தில் தனி விமானத்தின் மூலம் வெளிநாடுகளுக்கும், அண்டை மாநிலமான கேரளாவிற்கு சென்று பல ஆயிரம் கோடிகளுக்கு சொத்துக்களை வாங்கு குவித்துள்ளதாக குற்றம் சாட்டியதோடு ஓபிஎஸ் தமிபியான .ராஜா மணல் கொள்ளை மற்றும் ஆவின் பதிவிக்கு வந்த பின்பு ஆவினில் பணியிடங்களை நிறப்ப ஒரு பதவிக்கு 50 லடசம் ரூபாய் வரை பணம் பெற்று பணி வழங்க இருந்ததை திமுக தலைவர் நீதி மன்றத்தின் மூலம் தடுத்து நிறுத்தி உள்ளதாக குற்றம் சாட்டினர்

எனவே வரும் தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களித்து  பெரியகுளம் தொகுதியில்  திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டார்.  இதனை தொடர்ந்து பெரியகுளம் அருகே உள்ள தேவதானபட்டியில் பிரச்சராத்தை முடித்துக்கொண்டு திண்டுக்கல் மாவட்டம் சென்றார்.

 

Translate »
error: Content is protected !!