பேருந்து சேவையை தொடங்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை

தமிழகக்தில் ஊரடங்கை நீடிப்பதா? இல்லையா..? என்பது குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ குழு, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனையில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் பஸ் சேவையை அனுமதிக்க மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று நிபுணர் குழு பரிந்துரைத்தது. தொற்று இல்லாத மாவட்டங்களில் தளர்வுகளை அறிவிக்க வேண்டாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரைத்தது. குறைந்த தொற்றுநோயுள்ள மாவட்டங்களில் மால்களை திறக்க பெரிய வணிகங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

 

Translate »
error: Content is protected !!