பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயங்கும்

பொங்கலுக்கு கூடுதலாக 310 சிறப்பு இணை பஸ்கள் , மாநகர போக்குவரத்து கழகம் ஏற்பாடு. 

சென்னை,

பொங்கல் திருநாளை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் புறப்படும் பின்வரும் 5 பேருந்து நிலையங்களுக்கு பொதுமக்கள் எளிதாக சென்றிட ஏதுவாக, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், கூடுதலாக 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் 11.01.2021 முதல் 13.01.2021 ஆகிய 3 நாட்களுக்கு 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றன.

 பொங்கல் திருநாளினை முன்னிட்டு, பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றிட ஏதுவாக, சென்னையிலிருந்து 11, 12 மற்றும் 13 ந் தேதிகளில் இயக்கப்படும் 10,228 பேருந்துகளில், 11 ம் தேதி 2,226 பேருந்துகளும், 12 ம் தேதி 4,000 பேருந்துகளும், 13 ம் தேதி 4,002 பேருந்துகளும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. மேலும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து 5,993 பேருந்துகள் என ஆக மொத்தம் 16,221 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இப்பொங்கல் திருநாளினை முன்னிட்டு, சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில், இன்று (11 ந் தேதி) முதல் 13 ந் தேதி வரை 3 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள் ஐந்து இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

  1. மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்

 

  1. தாம்பரம் புதிய பேருந்து நிலையம் (மெப்ஸ்) & தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம்

 

  1. பூவிருந்தவல்லி பேருந்து நிலையம்

 

  1. புரட்சிதலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் (கோயம்பேடு)

 

  1. கே.கே.நகர் பேருந்து நிலையம்

 

இணைப்பு பஸ்கள்:

பொதுமக்களின் வசதிக்காக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் இணைப்புப் பேருந்துகளின் விவரம் வருமாறு:

கோயம்பேடு:

159 (திருவொற்றியூர்), 121 (மணலி), 121yஎம் (மாதவரம்), 15 (பிராட்வே), 27பி (அண்ணா சதுக்கம்), 46ஜி (எம்.கே.பி. நகர்), 72 (தி.நகர்), 70 (ஆவடி), 78 (திருவான்மியூர்), 77 (ஆவடி), 46 (திரு.வி.. நகர்), 570 (கேளம்பாக்கம்), 159 (எண்ணூர்), 16கே (குன்றத்தூர்), 570சி (கண்ணகி நகர் எஸ்சிபி), 48சி (வள்ளலார் நகர்), 153 (பூந்தமல்லி), 70வி (பெருங்களத்தூர்) ஆகிய இடங்களில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு மொத்தம் 116 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

 தாம்பரம்:

 தாம்பரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பஸ்கள் வருமாறு.

21ஜி (பிராட்வே), 18 (பிராட்வே), 91 (திருவான்மியூர்), 95 (திருவான்மியூர்), 99 (அடையாறு), 51 (வேளச்சேரி), 515 (கோவளம்), 18ஜி (பிராட்வே), 500 (செங்கல்பட்டு), 583 (ஸ்ரீபெரும்புதூர்), 515 (திருப்போரூர்), வி51 (தி.நகர்), 99 (சோழிங்கநல்லூர்), 515 (மாமல்லபுரம்), 5 (தி.நகர்), ஜி18 (தி.நகர்) ஆகிய இடங்களில் இருந்து தாம்பரம் பஸ் நிலையத்திற்கு மொத்தம் 114 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பூந்தமல்லி:

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் பஸ்கள் வருமாறு.

62 (செங்குன்றம்), 65பி (அம்பத்தூர் எஸ்டேட்), 66 (தாம்பரம்), 154 (தி.நகர்), 54 (பிராட்வே), 101 (திருவொற்றியூர்), 49எப் (மந்தவெளி) ஆகிய இடங்களில் இருந்து பூந்தமல்லி பஸ் நிலையத்திற்கு மொத்தம் 57 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்:

121கட் எம்.எம்.பி.டி. எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு, 114 செங்குன்றம் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு, 121எப் தாம்பரம் மாதவரம் பேருந்து நிலையம், 121எச் கவியரசு கண்ணதாசன் நகர் தாம்பரம், 157 திருவொற்றியூர் செங்குன்றம் ஆகிய இடங்களுக்கு 16 பஸ்கள் இயக்கப்படுகிறது.

கே.கே.நகர் பேருந்து நிலையம்:

5 பெசன்ட் நகர் வடபழனி, 570வி கேளம்பாக்கம் வடபழனிக்கு 7 பஸ்கள் இயக்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!