பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது – சிபிஐ விசாரணை

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட மேலும் 3 பேர் கைது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்த சம்பவம் தமிழகத்தையே அதுர செய்தது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின்பேரில் பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.இந்த நிலையில், இந்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள  அருளானந்தம், பைக் பாபு ,கெரோன்பவுல் ஆகிய 3 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!