பெரியகுளம்
மஞ்சளார் அணை 55அடி நீர் மட்டத்தை எட்டியதால். இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டூள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம்.தேவதானப்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது மஞ்சளார் அணை தற்போது மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் அணைக்கு வினாடிக்கு 300 கன அடி வீதம் நீர் வரத்து உள்ளது இதனால் தற்போது மஞ்சளாறு அணை நிலவரபடி 55.அடி நீர் மட்டத்தை எட்டியதால் இருதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார்
இந்த அணையின் மொத்த உயரம் 57 அடி கொள்ளளவு 435.35 மில்லியன் கனஅடி ஆகும் தற்போது அணைக்கு நீர்வரத்து -விநாடிக்கு 300 கனஅடியாக இருப்பதாலும் தற்போது 55 அடியை எட்டி உள்ளது மேலும் அனையின் நீர் இருப்பு 435.35 மில்லியன் கன அடியாக இருப்பதாலும் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரானது
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மற்றும் சிவஞானபுரம் கிராமங்கள் வழியாக கடந்து செல்வதால் கரையோர கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ அற்றை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தால் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது
மேலும் அணையின் நீர்மட்டம் 55 அடியை எட்டியதால் இறுதிக் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது இதனால் தேனி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 5, 200 எக்கர் விவசாய நிலங்கள் பாசனத்திற்கு பயன் பெரும் மேலும் முதல் போக நெல் சாகுபடிக்கு பயன் பெறுகின்றது
மேலும் மஞ்சளாறு தேவதானப்பட்டிகெங்குவார்பட்டி பழைய வத்தலக்குண்டு செக்காபட்டி கண்ணாபட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு குடிநீர் வாழ்வாதாரமும் விளங்குகிறது அணை நிரம்பியதால் மஞ்சளாறு அணை தேனி திண்டுக்கல் மாவட்ட பாசன விவசாயிகளும் பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர