காலில் அறுவை சிகிச்சை செய்த நடிகர் கமலஹாசன் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
காலில் ஏற்பட்ட தொற்று காரணமாக நடிகர் கமலஹாசன் 18–ம் தேதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மருத்துவ குழுவினரின் தொடர் கண்காணிப்பில் இருந்த கமலஹாசன் இன்று மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆனார். சில நாட்கள் வீட்டில் ஓய்வு எடுக்க உள்ளார் கமல்.