மாமியார் மருமகள் சண்டையைத் தீர்க்கக் கொடைக்கானல் அருகே அமைந்திருக்கிறது வினோத கோயில்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட  அட்டுவம்பட்டி என்ற கிராமம்.

கொடைக்கானல் மலை கிராமங்களில் முக்கிய இடமாகவும் இருந்து வருகிறது ..தொடர்ந்து இங்கு வசிக்கும் மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது .இந்த மலைகிராமத்தில் மக்களை வியப்படைய செய்யும் வகையில் கோவில் ஒன்று உள்ளது.

அட்டுவம்பட்டி கிராமத்தில் இருந்து  சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சென்றால் இந்த வினோத கோயில் இருக்கிறது. அதாவது பல ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டைவிட்டு கோபித்து வந்த மருமகளை சாந்தப்படுத்தி மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல மாமியார் வந்ததாகவும் அப்படியே அவர்கள் கல்லாக மாறி தற்போது சாமியாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.

அந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்கள்  கோயிலுக்கு பெரும்பாலும் குடும்ப சண்டையில் இருப்பவர்ள்  வருகை தருகிறார்கள். குறிப்பாக இந்த கோயிலுக்கு வந்து சென்றுவிட்டால் மாமியார்-மருமகள் பிரச்சினை சற்று குறையும் என்றும் இதுமட்டுமல்லாது இந்த கோயிலில் சுற்றி ஏராளமான விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகள் இருந்து  வருகிறார்கள்.

அந்த விவசாயிகளுக்கும் இந்த கோயிலை தற்போது ஒரு காவல் தெய்வமாக இருந்து வருகிறது .மேலும் பல்வேறு கோவில்களை தமிழகத்தில் நாம் கண்டிருப்போம் ஆனால் இது போன்று மாமியார்-மருமகள் கோவிலை முதன்முறையாக கொடைக்கானல் மலைப்பகுதியில் காண்பது வியப்பாகவே இருக்கிறது. மேலும் இந்த கோயிலில் வருடாந்திர பூஜை ஒருமுறை நடக்கும் எனவும் இந்த பூஜையில் பொங்கல் வைத்து மட்டுமே  வழிபடுவர்  எனவும் தெரிவிக்கிறார். மேலும் பழங்காலம் இந்த கோவிலுக்கு செல்ல கூடிய சாலை .பராமரிப்பு  இன்றி இருப்பதாகவும் உரிய பராமரிப்பு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.

Translate »
error: Content is protected !!