துறையூர் அடுத்து பச்சை மலையில் உள்ள மினி குற்றாலம் என அழைக்கப்படும் மங்கலம் அருவிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் – சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நடவடிக்கை எடுப்பாரா என எதிர்பார்ப்பில் காத்திருக்கும் சாலை பயனீட்டாளர்கள் .
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துறையூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் பச்சை மலை உள்ளது இந்த பச்சை மலையில் மினி குற்றாலம் என அழைக்கப்படும் மங்கலம் அருவி உள்ளது இந்த அருவி குளிப்பதற்கு திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் அதிக அளவில் வருவார்கள் ஏனென்றால் மூலிகை மலையின் பல பகுதிகளில் இருந்து வருவதால் பல்வேறு மூலிகைச் செடிகள் பட்டு வருவதால் பல நோய்கள் குணமாகும் என்று பல இங்கு குளித்துவிட்டு உற்சாகமாக செல்வார்கள்.
இந்நிலையில் உப்பிலிய படத்திலிருந்து சோபனாபுரம் டாப் செங்காட்டுப்பட்டி வழியாக நல்ல மாத்தி என்ற மலை கிராமம் செல்லும் சாலையில் 15 கிலோமீட்டர் தொலைவில் மங்கலம் என்ற அறிவு உள்ளது இந்த அருவிக்கு செல்லும் சாலைஇல்லாமல் குண்டும் குழியுமாக இருப்பதால் சுற்றுலா செல்லும் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர், மேலும் இந்த அருவியின் சாலை சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் சின்ன மங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டதாகும் இதன் மறு பகுதி திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாகவும் இதனால் எல்லையை காரணம் காட்டி சாலை செப்பனிடாமல் உள்ளனர்.
இதுகுறித்து சாலை பயனீட்டாளர்கள் சரவணன் நடேசன், அய்யாரப்பன் கூறும்போது….. திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் தான் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவரிடம் இது குறித்து தெரிவித்து இந்த மங்கலம் அருவி சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கும் புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதற்கு மனு அளிக்க உள்ளதாகவும், இயற்கையில் வரும் அருவியில் குளிப்பதற்கு பொதுமக்கள் ஏதுவாக சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.