மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ – ரிஜிஸ்டர் செய்வது எப்படி?
வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் இ- ரிஜிஸ்டர் செய்வது எப்படி?
அத்தியாவசிய பணிகளுக்காக மாவட்டங்களுக்கு உள்ளே, மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள இ-பாஸ் தேவையில்லை.
https://eregister.tnega.org/#/user/pass விண்ணப்பிப்பது எப்படி ?
* மேற்கண்ட லிங்கில் உள்நுழைந்து மொபைல் எண்ணை பதிவு செய்து கேப்சாவை type செய்து submit கொடுங்கள்
* அடுத்து உங்கள் மொபைலுக்கு வரும் OTP எண்ணை பதிவிட்டு கேப் சாவை உள்ளிட வேண்டும்.
* அடுத்து வரும் விண்ணப்பத்தில் நீங்கள் பயணிக்கும் தேர்வை கிளிக் செய்துகொள்ளுங்கள்.
* வெளிநாட்டில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு வரும் அனைவருக்கும் இ – பாஸ் பெற வேண்டும்.
* அடுத்து தங்களது பெயர், முகவரி ( வீடு மற்றும் செல்லுமிடம்) பயண வரம்பு மாவட்டங் களுக்கு இடையே அல்லது மாநிலங்களுக்கு இடையே என்ற தேர்வை தேர்ந்தெடுக்க வேண்டும்.
* அதேபோல் பயணத்தின் நேரம் எண்ணிக்கை ஆகியவற்றை பூர்த்தி செய்யவேண்டும்.
* அடுத்து பயனர்கள் விவரம் வாகன விவரம் அடையாள அட்டை ஆகிய விவரங்களையும் பயணத்திற்கான காரணத்தையும் டைப் செய்துகொள்ளுங்கள்.
* மருத்துவ அவசர நிலை என்றால் மருத்துவச் சான்று அல்லது அது சம்பந்தப்பட்ட ஆவணம்
* திருமண நிகழ்வு என்றால் திருமண அழைப்பிதழ் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
* இ -பாஸ் பெறுவதற்கு தங்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.
* விவரங்கள் அனைத்தும் நிரப்பப்பட்ட தும் தங்கள் ஆவணங்கள் மற்றும் சமர்பிப்பு விபரங்கள் சரிபார்க்கப்படும் அவை அனைத்தும் உறுதி செய்யப்பட்டதும் இ பாஸ் வழங்கப்படும்.
* விண்ணப்பதாரர் சரியான தகவல்களை மட்டும் குறிப்பிடுங்கள்.
* விண்ணப்பதாரர் பயணம் செய்கிறார் என்றால் விண்ணப்பதாரர் பெயரும் பயணம் செய்வோரின் பட்டியலில் தெரிவிக்கப்படவேண்டும்.
* தொடர்புடைய ஆவணங்களை இணைக்க வேண்டும்.
* நமது விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதும் உடனடியாக குறிப்பு எண்ணுடன் SMS மற்றும் Email (மின்னஞ்சல்) அனுப்பப்படும்.
* மேலும் உங்கள் சந்தேகங்களுக்கு அணுக வேண்டிய உதவி எண்கள்.
1070
1072
1800 425 1333
இந்த அவசரகால போக்குவரத்து அனுமதி சீட்டு தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.