மோடியின் “கேம் சேஞ்ச்”…புதிய உத்தி… திகைப்பில் அதிமுக!

சென்னை,

வழக்கமாக அமித்ஷாவின் அரசியல் ஆட்டத்தை தான் நாம் பார்த்து வருகிறோம்.. ஆனால், இந்த முறை பிரதமர் மோடியின்கேம் சேஞ்ச்தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.! ஊழலுக்கு எதிரான கொள்கைகளை முன்னிறுத்திதான் பாஜக அரசியல் செய்து வருகிறது.

அப்படி இருந்தும் அதிமுகவுடன் கூட்டணியில்தான் இருக்கிறது..! இந்த முறை பிரதமர் தமிழகத்துக்கு 2,3 முறை வந்து போய்விட்டார்.. இந்த பயணங்கள் மூலம் மோடியின் யுக்தி வெகுவாக கவனிக்கப்பட்டு வருகிறதுஒருவகையில் திமுகவுக்கு கலக்கத்தையும் தந்து வருவதாக தெரிகிறது.

 

திமுக ஒரு ரவுடியிஸம் கட்சி, காட்டாட்சி நடக்கும், ஊழலாட்சிஎன்று மேடையிலேயே கடுமையாக பேசினார் பிரதமர்.. திமுகவை விமர்சிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு பிரதமர் இதுபோன்ற வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தலாமா? அப்படின்னா, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு என்னதான் மரியாதை? என்ற கேள்வியை நம்மால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

ஆனால், பாஜகவின் ஒரே நோக்கம் திமுகதான் என்பதும், திமுகவை டேமேஜ் செய்தாலே பாஜகவின் மதிப்பு கூடும் என்பதும்தான் மோடியின் டெக்னிக்.. குறைந்தபட்சம் 160, 170 இடங்களிலாவது திமுக போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறது.. மெஜாரிட்டியை தக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.. ஆனால், இந்த வெற்றியை டபுள் டிஜிட்டிற்குள் கொண்டு வந்து அடக்குவதே பாஜகவின் அதிரடி பிளான்.

அதற்காகவே, திமுக சம்பந்தமாக ஒரு ரிப்போர்ட் ஏற்கனவே எடுத்திருந்தது.. அதில், இதுவரை திமுக போட்டியிட்டு வெற்றி பெற்ற, மற்றும் தோல்வி அடைந்த இடங்கள், மக்களிடம் என்ன மாதிரியான எதிர்ப்புகள், அதிருப்திகள் உள்ளன போன்றவை குறித்தெல்லாம் அந்த ரிப்போர்ட்டில் உள்ளது.. இதைதான் பிரதமர் மோடி கையில் எடுத்து பேசி வருவதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.

மோடியின் பேச்சுக்களில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டி உள்ளது.. இந்தியாவிலேயே ஊழல் மாநிலம் தமிழ்நாடுதான் என்று 2016-ல் இதே மோடிதான் சொன்னார்.. அன்று ஜெயலலிதாவை வெளிப்படையாக சொன்ன மோடி, இன்று ஜெயலலிதா சிறந்த நிர்வாகி என்று புகழ்கிறார்அதுமட்டுமல்ல, “ஜெயலலிதாவுக்கு திமுக எப்படியெல்லாம் டார்ச்சர் தந்ததுஎன்று கேள்வியையும் கேட்கிறார்?

மோடியா? லேடியா என்ற புகழ்பெற்ற வாசகம் இன்னும் தமிழக மண்ணில் இருந்து ஒரேடியாக மறையவில்லை என்றாலும், “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பாஎன்று மேம்போக்காக எடுத்து கொண்டாலும், ஒரு ஊழல் குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட்டால் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவை, இன்று மோடியே கையில் எடுக்க காரணம் என்ன? இதைதான் வாக்கு அரசியல் என்று எதிர்தரப்பு விமர்சனம் செய்து வருகிறது.. எனினும், மோடியின் அதிரடிகளில் இதுவும் ஒன்று.

அதேசமயம், இறந்துபோன ஜெயலலிதாவை புகழும் பிரதமர், முதல்வர் எடப்பாடியாரை அவ்வளவாக வெளிப்படையாக புகழ்வது இல்லை என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது.. எந்த முதல்வரையும் மோடி புகழ்வது கிடையாதா என்று கேட்டுவிட முடியாது.. பீகார் தேர்தலில் நிதிஷ் குமாரை அவர் புகழ்ந்த விதத்தை நாடறியும்.

அந்த வகையில், பாஜக தலைமையின் பிளான் என்னவாக இருக்கிறது என்று பார்த்தால், திமுகவை டேமேஜ் செய்வது.. அதன்மூலம் பாஜகவை தூக்கி பிடித்து, மறைமுகமாக அதிமுகவை பலவீனப்படுத்துவது.. என்பதுதான் மோடியின் ஒரே கல்லில் மூன்று மாங்காய் என்று கணக்கில் கொள்ளலாம்.. அதாவது திமுகவுக்கு மாற்று பாஜக, திமுகவுக்கு நேர் எதிரி பாஜக, என்பதைபோலவே அவரது பேச்சு அமைந்து வருகிறது.. இப்படி ஒரு வியூகமும், நகர்வுகளும் வியப்பை தந்து வருகின்றனஇருந்தாலும் தாமரை மலருமா?

 

Translate »
error: Content is protected !!