கொரோனா தொற்றுக்கு ரஷ்யா பரிசோதித்துவ் வரும் ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பூசியை பரிசோதிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசியை கண்டறியும் பணியில் அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக உள்ளன.
தடுப்பூசி கண்டறிந்துவிட்டதாக முதன்முதலில் தெரிவித்த ரஷ்யாவும் ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பூசியை தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதித்து வருகிறது.
இந்த சூழலில் அந்த பரிசோதனை பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். மருந்து பற்றாக்குறையின் காரணமாக பரிசோதனைகள் தற்காலிகமான நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில், கொரோனாவுக்கான முதற்கட்ட பரிசோதனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 21 நாட்களுக்கு பிறகு மீண்டும் தடுப்பூசி செலுத்த வேண்டும். அதற்காகவே பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, ரஷ்ய அதிகாரிகள் விளக்கம் தந்துள்ளனர்.