ரஷ்யாவில் கொரோனாவால் 21 லட்சம் பேர் பாதிக்கபட்டுள்ளனர் .

மாஸ்கோ: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கடந்த சில நாட்களாக ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ரஷ்யா நாட்டில் மேலும் 25,173 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21 லட்சத்தைக் கடந்துள்ளது. அந்நாட்டில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 361 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 36,540 ஆக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Translate »
error: Content is protected !!