கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கையில் ரஷ்யா தற்போது உலகில் 5 வது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்று புதிதாக 20,538 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ரஷ்யாவில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 54.51 லட்சத்தைத் கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மேலும் 599 பேர் இறந்துள்ளனர், இதனால் கொரோனாவால் இறப்பு எண்ணிக்கை இதுவரை 1,33,282 ஆக உள்ளது. 49.56 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 3.61 லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.