விவசாயிகள் போராட்டம் குறித்து பாடகி ரிஹானா ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டதை புறந்தள்ளி, அவரது தாய்நாட்டிற்கு கொரோனா தடுப்பூசிகளை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது.
கரீபியன் நாடான பார்படோஸ் பிரதமர் Mia Amor Mottley, தடுப்பு மருந்துகளை வழங்குமாறு இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று, 1 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளை அந்நாட்டிற்கு இந்தியா அனுப்பிவைத்தது.
இதற்கு நன்றி தெரிவித்து, பார்படோஸ் பிரதமர் Mia Amor Mottley பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், அரசு சார்பாகவும், நாட்டு மக்கள் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்த, பார்படோஸ் பாடகி ரிஹானாவின் ட்விட்டர் பதிவுக்கு ஆதரவு–எதிர்ப்பு என சர்ச்சைகள் கிளம்பியுள்ள நிலையில், அவரது நாட்டிற்கு தடுப்பு மருந்துகளை இந்தியா வழங்கியுள்ளது.