எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரித்து வருவதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதற்கிடையில், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ .73.50 உயர்ந்து ரூ .1,761 ஆக விற்பனை செய்யப்படுகிறது.