வழக்குகளை விரைந்து முடிக்க காவல் துறை ஒத்துழைப்பு மிக அவசியம்

திருப்பத்தூா்:

வழக்குகளை விரைந்து முடிக்க காவல் துறையினரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என நீதிபதிகள் தெரிவித்தனா்.

 திருப்பத்தூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைவில் முடிக்க மாவட்டத் தலைமைக் குற்றவியல் நீதிபதி ஆனந்தன், ஆட்சியா் ..சிவன்அருள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நீதிபதிகள் பேசியதுதிருப்பத்தூா் மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பொது முடக்கக் காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், வாகனங்கள் பறிமுதல் என 14 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், கொலை, கொள்ளை, திருட்டு, ஆயுத கொலை, ஜாதி பிரச்னை, பாலியல் வன்கொடுமை, போக்ஸோ உள்ளிட்ட வழக்குகளும் உள்ளன.

 குறிப்பாக, கொலை வழக்குகள் முடிவடையும் தறுவாயில் உள்ள நிலையில் இறுதியாக சாட்சி விசாரணையில்தான் காலதாமதம் ஏற்படுகிறது. காவலா்களின் பணி மாறுதல் உள்ளிட்ட பிரச்னைகளால் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு, தீா்ப்பு வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது. வழக்குகளை விரைந்து முடிக்க காவல் துறையின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றனா்.

 அரசு குற்றவியல் இணை இயக்குநா் அமுதா, திருப்பத்தூா் ஒருங்கிணைந்த மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள் அருண் சங்கா், ரம்யா, பத்மாவதி, காளிமுத்து, கனிமொழி, டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

Translate »
error: Content is protected !!