விஜய் சேதுபதிக்கு போட்டியாக இறங்கும் சந்தானம் படம்..!

நடிகர் சந்தானம் ‘டிக்கிலோனா’ படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். கார்த்திக் யோகி இயக்கிய இந்த படத்தில் அனகா மற்றும் ஷிரினுக்கு சந்தானத்துக்கு ஜோடியாக நடித்துள்ளனர். மேலும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று ஜீ5 ஓடிடி தளத்தில் படம் நேரடியாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, நடிகர் சந்தானம் நடித்த படம் ஓடிடி இல் நேரடியாக வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த “துக்ளக் தர்பார்” திரைப்படம் அதே நாளில் வெளியாகிறது. படம் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!