தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குள்ளப்புரத்தில் வேளாண் தொழில்நுட்பக்கல்லூரி உள்ளது.
இந்த கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் தர்ஷினி, கௌரி, ருபிகா, ஜெயஸ்ரீ, ஜனனி, ஷிபானா பாத்திமா, சிவசங்கரி, ரெஜினா, தேவி இசக்கியம்மாள் ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வடுகபட்டி கிராமத்தில் தங்கி விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
உலக காடுகள் மற்றும் தண்ணீர் தினத்தை முன்னிட்டு மியாவாக்கி முறையில் வடுகபட்டி பொது கழிப்பறை அருகில் மரக்கன்றுகளை அடர் நடவு செய்தனர். இதில் வேம்பு, புன்னை, இலவம், நாவல், மூங்கில், தேக்கு, பெருங்கொன்றை, அசோகா போன்ற மரக்கன்றுகளை நட்டனர்.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் முனைவர் நாகராஜன், உதவிப்பேராசிரியைகள் முனைவர் ஜெயலட்சுமி, பிரியதர்சினி, ஊராட்சி ஒன்றிய அலுவலக செயலாளர், மேற்பார்வையாளர் சுப்புராஜ் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் உட்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.