வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 30 நாட்களாக தொடா் போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 30 நாட்களாக தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

விவசாயிகள், அரசாங்கத்தின் பேச்சுவார்த்தை அழைப்புக்கு செவிசாய்க்காமல் போராடி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று 31வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

இதனிடையே விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு மீண்டும் அழைப்பு விடுத்தது. இதையடுத்து விவசாயிகள், மத்திய அரசின் அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் பற்றி தங்களுக்குள் கலந்துரையாடல் நடத்தினார்கள்.

அதில் சில விவசாய அமைப்பினர் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடரலாம் என்று தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை ஒரு தீர்வை கொடுக்கலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள். இதுபற்றி இன்று விவசாயிகள் மீண்டும் கூடி ஆலோசிக்கிறார்கள். அதன்பின்னர், மத்திய அரசுடன் விவசாய அமைப்பினர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி அறிவிக்கப்பட உள்ளது.

Translate »
error: Content is protected !!