அடையாறு ஆனந்தபவன் ஊழியர்களுக்கு கோரோனோ…?

2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இரண்டாம் அலையாக, உருமாறிய கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், பல நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்திக்கொண்டிருக்கின்றன.

மறுபுறம் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ளகோவிஷீல்ட்தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளகோவாக்சின்தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அடையாறு ஆனந்தபவன் ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை அடையாறு ஆனந்தபவனின் இரண்டு கிளைகளில் பணியாற்றிய 4 ஊழியர்களுக்கு தற்போது கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!