இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் காரணமாக, சவூதி அரேபியா இந்தியாவிற்கு மேலும் அதிக அளவிலான ஆக்சிஜன் கண்டைனர்களை அனுப்பியுள்ளது.
கடந்த மாதம் 80 டன் திரவ ஆக்ஸிஜனை இந்தியாவுக்கு அனுப்பியதைத் தொடர்ந்து, தற்போது 60 டன் ஆக்ஸிஜனுடன் கூடிய மூன்று கண்டைனர்களும், அவற்றை எடுத்துச் செல்ல மேலும் 100 கொள்கலன்களும் அனுப்பியுள்ளது. இந்த கொரோனா நிவாரண பொருட்கள் ஜூன் 6, 2021 அன்று மும்பைக்கு வந்து சேரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது