அதிமுக அரசையும், கட்சியையும் விமர்சிப்பது தான் தி.மு.க.வின் திட்டம் – எடப்பாடி பழனிசாமி

மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் தி.மு.. நாடகம் நடத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சியினரும், எதிர்கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத் தொடங்கி விட்டனர். இதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல மாவட்டங்களில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்

இந்நிலையில் இன்று கோவையில் பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கோவை கோனியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவை மாவட்டத்தில் இன்றும் நாளையும் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

பின்னர் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “ அதிமுக அரசையும், கட்சியையும் விமர்சிப்பது தான் தி.மு..வின் திட்டம். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்று ஸ்டாலின் சொல்கிறார் அவரது சதித்திட்டம் முறியடிக்கப்படும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. குறைகளை சுட்டிக்காட்டினால் அவர்களுக்கு பதில் சொல்ல தெரியவில்லை.

அப்பாவி பெண்ணை திட்டமிட்டு தி.மு..வினர் தாக்கி உள்ளனர். மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் தி.மு.. நாடகம் நடத்துகின்றனர். கடந்த முறை தி.மு.. கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? ” என்று அவர் கேள்வி எழுப்பினார்

 

Translate »
error: Content is protected !!