அதிமுக தேர்தல் பிரசாரம் நாளை தொடங்குகிறது

சென்னையில் நாளை முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்அமைச்சர் .பன்னீர்செல்வம் இருவரும் ஒரே மேடையில் சிறப்புரையாற்றி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்க உள்ளனர்.

தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி .தி.மு.. சார்பில் தேர்தல் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் .தி.மு..வின் முதல்அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்நிறுத்தப்பட்டுள்ளார்.

தேர்தலை ஒருங்கிணைக்க மண்டல வாரியாக பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். .தி.மு..வில் வழிகாட்டுக்குழு அமைக்கப்பட்டிருந்த நிலையில் மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இது மட்டுமின்றி தலைமைக் கழகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியும் வேகமாக நடக்கிறது. முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் தலைமையில் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கருத்துக்களை பெற்று சட்ட நிபுணர்களின் ஆலோசனையுடன் மக்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற செய்து வருகின்றனர். இந்த பணிகள் ஒரு புறம் நடைபெறும் நிலையில் மற்றொரு புறம் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.

முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இதன் அடுத்த கட்டமாக சென்னையில் நாளை எடப்பாடி பழனிசாமியும், .பன்னீர்செல்வமும் ஒரே மேடையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்க உள்ளனர்.

இதற்காக சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.. மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதுஇந்த கூட்டத்தில் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்அமைச்சர் .பன்னீர்செல்வம் இருவரும் சிறப்புரையாற்றி பிரசாரத்தை தொடங்கி வைக்க உள்ளனர்.

வருகிற பொதுத்தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற போர் முழக்க பிரசாரமாக இந்த பொதுக்கூட்டத்தை நடத்துகின்றனர். இதற்காக ராயபேட்டை ஒய்.எம்.சி.. மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்படுகிறது. இதில் தலைமைக் கழக நிர்வாகிகள், வழிகாட்டு உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்..க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்

இந்த பொதுக்கூட்டத்தில் 20 ஆயிரம் பேரை திரட்டவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதனால் மைதானத்தில் நுழைவு வாயிலில் சானிடைசரை கொடுத்து கைகளை சுத்தப்படுத்திய பின்னரே பொதுக்கூட்ட மைதானத்தில் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் முக கவசம் வழங்கவும் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். .தி.மு.. நடத்தும் முதல் பிரசார பொதுக்கூட்டம் என்பதால் இதை மிக பிரமாண்ட அளவில் நடத்து வதற்கும் மற்ற கட்சிகளுக்கு அறைகூவல் விடுக்கும் வகையில் நடத்திட வேண்டும் என்றும் .தி.மு.. தலைமை முடிவு செய்துள்ளது. எனவே நாளை நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, .பன்னீர்செல்வம் கூட்டணி குறித்து என்ன பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

 

Translate »
error: Content is protected !!