தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் இன்று முதல் தமிழக அரசு முழு பொது முடக்கத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தியது.
இதனால் பொதுமக்கள் வெளியில் வருவதை தடுப்பதற்காக பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் அத்தியாவசிய தேவைகளான காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வீடுகள் தோறும் கிடைப்பதற்காக பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் தனித்தனியே வாகனங்கள் மூலம் ஏற்பாடு செய்துள்ளது.
இதில் 5 கிலோவில் 10 வகையான காய்கறிகள் அடங்கிய 100 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இதற்காக தனியாக காய்கறி வியாபாரிகள் சங்கத்தில் இருந்து முறையாக கொரோனா பரிசோதனை செய்து பரிசோதனை முடிவுகள் நோய்த்தொற்று இல்லை என்று கண்டறியப்பட்ட நபர்களுக்கு மட்டும் வாகனங்களில் வீடுகள் தோறும் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப் பட்டு வரும் நிலையில்,
இன்று பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் வாகனங்களை பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் அசோக் குமார் மற்றும் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் முத்துக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தனர். வீடுகள் தோறும் அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்யும் நபர்கள் முறையாக முக கவசம் அணிந்து அடிக்கடி கிருமி நாசினிகள் கொண்டு கைகளை சுத்தப்படுத்தும் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களுக்கும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி பின்பு பொருட்களை வழங்க வேண்டும் என காவல்துறையும் நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி வீடுகள்தோறும் சென்று காய்கறி மற்றும் மளிகை பொருட்களை விற்பனை செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.